வாக்கிய முறை, திருக்கணித முறை இவற்றில் ஜாதகம் கணிக்க மிகச் சரியான முறை எது?

Admin | Jan. 23, 2022, 12:40 a.m.

வாக்கிய முறை, திருக்கணித முறை இவற்றில் ஜாதகம் கணிக்க மிகச் சரியான முறை எது?

பஞ்சாங்கம் என்றால் என்ன?

பஞ்ச அங்கங்கள் சேர்ந்த குறிப்பே பஞ்சாங்கம். ஒருநாளுக்குரிய வாரம், திதி, கரணம், நட்சத்திரம், யோகம் ஆகிய ஐந்து பற்றிய அடிப்படைக் குறிப்புகளே பஞ்சாங்கம் எனப்படும்.

வாக்கியப் பஞ்சாங்கம் தமிழ்நாட்டில் மட்டுமே பின்பற்றப்படுகிறது.

ஒவ்வொரு நாளும் கிரகங்களின் இருப்பிடம் அவற்றின் நகர்வு ஆகியனவற்றைக் கணக்கிட்டு ஒருவரின் ஜாதகம் கணிக்கப்படுகிறது. இதில் கிரக நிலவரங்களை அறிந்துகொள்ள பஞ்சாங்கத்தையே ஜோதிடர்கள் நாடுகிறார்கள். அப்படி ஜோதிடர்கள் பயன்படுத்தும் பஞ்சாங்கங்கள் பல உள்ளன. இவற்றுள் வாக்கியப் பஞ்சாங்கம் பழைமையானது என்று கருதப்படுகிறது. இதை உருவாக்கியவர்கள் ரிஷிகள் என்று கருதப்படுகிறது. ஆற்காடு ஸ்ரீ சீதாராமையர் சர்வ முகூர்த்த பஞ்சாங்கம், திருநெல்வேலி பஞ்சாங்கம், ராமநாதபுரம் வாக்கியப் பஞ்சாங்கம், 28-ம் நம்பர் பாம்புப் பஞ்சாங்கம், ஸ்ரீ காஞ்சி மடத்து பஞ்சாங்கம், சிருங்கேரி மடம் பஞ்சாங்கம், ஸ்ரீரங்கம் வாக்கிய பஞ்சாங்கம், ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாள் தேவஸ்தான வாக்கியப் பஞ்சாங்கம், திருக்கோயில் அனுஷ்டான பஞ்சாங்கம் என்பவை புகழ்பெற்ற வாக்கியப் பஞ்சாங்கப் புத்தகங்களாகும். தமிழகத்தில் பெரும்பாலான ஆலயங்களில் வாக்கியப் பஞ்சாங்கமே பின்பற்றப்படுகிறது.

வாக்கியப் பஞ்சாங்கத்தைப் போன்றே முக்கியத்துவம் வாய்ந்த பஞ்சாங்கங்களாகக் கருதப்படுவது திருக்கணிதப் பஞ்சாங்கம். சந்திரனின் அயனாம்சத்தின் அடிப்படையில் கணிக்கப்படும் இந்தத் திருக்கணித முறையும் பழங்காலத்திலிருந்தே உருவானது என்றும் வாக்கியப் பஞ்சாங்கத்தில் காணப்படும் குறைகள் நீக்கப்பட்டு 15-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது. திருக்கணிதத்திலும் பல்வேறு பஞ்சாங்கங்கள் காணப்படுகின்றன. வாக்கியத்துக்கும் திருக்கணிதத்துக்கும் ஒருநாளில் அதிகபட்சமாக 17 நாழிகை வரை வேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. அதாவது 6 மணி 48 நிமிஷம் வரை இந்த வேறுபாடு ஏற்படும். திருக்கணிதமே திருத்தப்பட்ட துல்லியமான பஞ்சாங்கம் என்று சொல்கிறார்கள் இதைப் பின்பற்றுபவர்கள்.

திருநள்ளாறில் வாக்கிய பஞ்சாங்கம் பின்பற்றப்படும் ஆச்சர்யம் நடக்கிறது.

சனிபகவானுக்கு சிறப்பு வாய்ந்த திருநள்ளாறு உள்ளிட்ட கோயில்களில் நடக்கும் திருவிழாக்கள், நிகழ்ச்சிகள் அனைத்தும் வாக்கிய பஞ்சாங்க அடிப்படையில் தான் இன்றளவும் நடத்தப்பட்டு வருகின்றன.

திருக்கணிதம், வாக்கிய பஞ்சாங்கம் இவற்றில் எதை நம்புவது, இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன?

திருப்பதியில் பின்பற்றப்படும் திருக்கணிதம்:

இதன் காரணமாக திருமலை திருப்பதில் திருக்கணித பஞ்சாங்க முறைப்படி தான் அனைத்து கோயில் விழாக்களும், நிகழ்வுகளும் தற்போது நடத்தப்பட்டு வருகின்றது.

பஞ்சாங்கத்தில் ஏற்பட்ட பஞ்சாயத்தில் காஞ்சி பெரியவர் ஒரே வார்த்தையில் சரியான தீர்வு சொல்லும் பொருட்டு, கோயில்களில் நடக்கும் அனுஷ்டானங்கள், நிகழ்வுகளுக்கு வாக்கிய பஞ்சாங்க முறைப்படியும்,

மனிதர்களுக்கு திருக்கணித பஞ்சாங்கத்தின் படியும் பின்பற்றுவது சரியானது என கூறி சென்றுள்ளார்.

தற்போது பிறக்கும் குழந்தைகள் அனைவருக்கும் பெரும்பாலும் திருக்கணித பஞ்சாங்க முறைப்படி தான் ஜாதாகம் கணிக்கப்பட்டு வருகின்றது.

Keywords: திருக்கணித பஞ்சாங்க முறைப்படி வாக்கியப் பஞ்சாங்கம்

Recommended posts